
பல ஆண்டுக் கிளேபாங் தமிழ்பள்ளிக்கு இணைக்கட்டம் தேவை குறித்து மேற்கொண்ட கனவு நனவாகியது.
தம்பூன் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் புதிய மூன்று மாடி பள்ளிக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது என்று
பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கிருஷ்ணசாமி முத்துசாமி கூறினார்.
பேரா மாநிலத்தில் அதிகமாணவர்கள கொண்டப பள்ளியாக விளங்கி வரும் இப்பள்ளியில் ஏற்கனவே மூன்று மாடிக்கொண்ட கட்டடம் உள்ளது.
கடந்த 2005–2006ஆம் ஆண்டுகளில் தோட்டப்பகுதியில் இயங்கி வந்த பள்ளி, 2015ஆம் ஆண்டு தற்போதுள்ள பிரதான சாலையோரத்தில் ( ஜாலான் கோலகங்சார்) மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
தற்போது கட்டப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடம், பள்ளியின் நான்காவது இணைக் கட்டடமாகும். இதில் 12 புதிய வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன.ல
இந்தக் கட்டடத் திட்டம் 2019ஆம் ஆண்டு அப்போதைய கல்வித் துணை அமைச்சர் தியோ நீ சிங் பதவிக்காலத்தில் முன்மொழியப்பட்டதாகவும், பின்னர் அரசியல் மாற்றங்களும், கொவிட்-19 பெருந்தொற்றும் காரணமாகத் திட்டம் தாமதமடைந்ததாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய பிரதமரின் அலுவலகத்தின் மூலம், நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஷ்குமார் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முக்கிய பங்காற்றியதாக அவர் பாராட்டினார்.
பிரதமர் இந்தியத் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய நிதித் திட்டத்தின் கீழ், கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கும் 35 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக் கட்டுமானப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய திருமதி பத்மினி அவர்களின் பங்களிப்பை அவர் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.
ஆசிரியர்களுக்கான அறைகள், தலைமை ஆசிரியர் அலுவலகம், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளின் அவசியத்தை வலியுறுத்தி, அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டவரும் அவரே என அவர் கூறினார்.
பள்ளியின் வளர்ச்சியில் பணியாற்றிய அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்களது காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, நிலம் பெற்றல், பள்ளி விரிவாக்கம், இணைக் கட்டடங்கள் அமைத்தல் மற்றும் பள்ளி வளர்ச்சிக்காக பல்வேறு தலைமையாசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்வில கலந்துக்கொண்ட தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஸ் குமார் அடுத்த வாரம் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள கூட்டத்தில் பேசினார்.
நீண்டகாலமாக இணைக்கட்டத்திற்கு பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் சமூகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தத் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த கட்டடம் பள்ளியின் அவசியமான தேவையாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும், பின்னர் ஆட்சி மாற்றங்களால் திட்டம் தாமதமானது. தற்போது மடானி அரசாங்கத்தின் நடவடிக்கையால் மீண்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுமார் 35 லட்சம் ரிங்கிட் அதிகமான செலவில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த கட்டடமர மூன்று மாடிகளுடன் 12 வகுப்பறைகள் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் நிறைவேறுவதற்கு பிரதமர் Anwar Ibrahim, தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வழங்கிய ஆதரவுக்கு நன்றிகள் தெரிவித்தார்.
மேலும், பள்ளியின் தேவையை நேரில் பார்வையிட்டு திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியதையும் நினைவுகூர்ந்தனர்.
அத்துடன், பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), முன்னாள் தலைமையாசிரியர் எல் .பி.எஸ். தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
புதிய கட்டடம் விரைவில் நிறைவடைந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டது.



