Latestமலேசியா

முதல் நாளிலேயே 58,865 பயணிகள்; ஷா ஆலம் LRT சேவைக்கு அமோக வரவேற்பு

கோலாலம்பூர், ஜூன் 30 – சேவை தொடங்கிய முதல் நாளிலேயே ஷா ஆலம் LRT-ஐ 58,865 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 5,000 முதல் 10,000 பயணிகள் என்ற எண்ணிக்கையை இது பல மடங்கு மீறியுள்ளது.

இந்தப் பயணிகளின் எண்ணிக்கை, இவ்வாண்டிற்கான 67,000 தினசரி சராசரி இலக்கை நெருங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், LRT சேவை எந்தவித சிக்கலுமின்றி திட்டமிட்டபடி சீராக இயங்கியதாகவும் கூறினர்.

அரசு அறிவித்ததன்படி, ஷா ஆலம் LRT மற்றும் அதனுடன் இணைந்த பேருந்து சேவைகளில் ஜூலை 31 வரை இலவசமாக பயணிக்கலாம்.

ஷா ஆலம் LRT பாதை, பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் நகரங்களை 20 நிலையங்கள் வழியாக இணைக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!