Latestமலேசியா

கோலாலம்பூர் உணவகத்தின் முன்பு காரில் 49 வயது ஆடவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர், ஜூலை 2 – கோலாலம்பூர் ஜாலான் கெமுந்திங் (Jalan Kemunting) பகுதியிலுள்ள ஒரு உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில், 49 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் காலை 9.55 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேதப் பரிசோதனை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற நிலையில், இந்தச் சம்பவம் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், காரில் சடலமாக இருந்த ஆடவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!