Latestஉலகம்

உல்லாசக் கப்பலில் பரவிய ஹந்தா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தது

ஜெனீவா, ஜூலை-3- உல்லாசக் கப்பலில் பரவிய ஹந்தா வைரஸ் (hantavirus ) தொற்று முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனமான WHO அறிவித்துள்ளது.

MV Hondius கப்பலில் ஏற்பட்ட இந்தத் தொற்றில் 12 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதுடன், 3 பேர் உயிரிழந்தனர்.

WHO தலைவர் கூறுகையில், தொற்றாளருடன் தொடர்பில் இருந்த கடைசி நபரும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் என்றார்.

மே 25-க்குப் பிறகு புதிய தொற்று எதுவும் பதிவாகாததால், இந்தப் பரவல் முடிவுக்கு வந்ததாக WHO அறிவித்துள்ளது.

இருப்பினும், எலிகள் மூலம் பரவும் ஹந்தா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசியோ, குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. எனவே, வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் WHO தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!