Latestமலேசியா

RM2 மில்லியன் மதிப்பிலான ஹெரோயின் கடத்தல் முயற்சி; மக்காவில் மலேசிய இளைஞர் கைது

மக்காவ், ஜூலை-5,

மக்காவு அனைத்துலக விமான நிலையத்தில், சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 24 வயது மலேசிய இளைஞர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது பயணப் பெட்டியில் இருந்த சூரை மீன் (tuna) டின்கள் மற்றும் பிஸ்கட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் சிக்கியது.

மலேசியாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றினால் பணத்தாசை காட்டப்பட்டு இந்த வேலைக்கு அவர் மக்காவ் அனுப்பப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு 3,000 ரிங்கிட் கூலி தருவதாக வாக்களிக்கப்பட்டதாகவும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மக்காவ் சட்டத் திட்டங்களின் படி அந்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இது போன்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் வலையில் சிக்க வேண்டாம் என பொது மக்களுக்கு அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!