Latestமலேசியா

2027க்குள் 300 புதிய பாலர் பள்ளி வகுப்புகள் திறக்க கல்வி அமைச்சு இலக்கு

கோலாலம்பூர், ஜூலை 7 – மலேசியாவில் ஆரம்பக் கல்வியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டுக்குள் 300 புதிய பாலர் பள்ளி வகுப்புகளைத் திறக்க கல்வி அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கல்வி அமைச்சர் பாட்லினா சிடெக் (Fadhlina Sidek) கூறுகையில், 2023 முதல் 2027 வரை மொத்தம் 1,040 புதிய பாலர் பள்ளி வகுப்புகள் தொடங்கப்படும் என்றார்.

இதன் மூலம் நாடு முழுவதுமுள்ள குழந்தைகளுக்கு தரமான, இலவச மற்றும் சமமான ஆரம்பக் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதோடு, 6 வயதில் முதலாம் ஆண்டில் சேர்வதற்கான அவர்களின் தயார்நிலையையும் மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

2026 மே 31 நிலவரத்தின்படி, கல்வி அமைச்சு, KEMAS மற்றும் தபிக்கா பெர்படுவான் (Tabika Perpaduan) ஆகியவை இணைந்து நாடு முழுவதும் 22,808 பாலர் பள்ளி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதில் 4 முதல் 6 வயதுக்குட்பட்ட 4,55,446 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

அதேபோல், கல்வி அமைச்சின் கீழ் மட்டும் 10,491 பாலர் பள்ளி வகுப்புகளில் 2,17,026 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும், பாலர் பள்ளிக் கல்வியை ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக கல்வி அமைச்சு, கிராமப்புற வளர்ச்சி அமைச்சு, தேசிய ஒற்றுமை அமைச்சு உள்ளிட்ட தரப்புகள் இணைந்து சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!