Latestஉலகம்

ஜப்பானில் கொடூரம்: சக தோழியின் உதடுகளை ஊசியால் தைத்த பெண் கைது

 

தோக்யோ, ஜூலை-9 – ஜப்பானில் தனது அறையில் தங்கியிருந்த சகத் தோழியின் உதடுகளை ஊசியால் தைத்ததாகக் கூறி, 49 வயது மாது ஒருவர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

​தலைநகர் தோக்யோவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கைதுச் செய்யப்பட்ட பெண், தனது சக தோழியின் உதடுகளைச் சாதாரண ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தி ஒன்றாகத் தைத்ததாக நம்பப்படுகிறது.

​பாதிக்கப்பட்ட 42 வயது பெண் மருத்துவமனைக்குச் சென்றதையடுத்து, மருத்துவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்தப் பெண்ணை போலீஸார் உடனடியாகக் கைதுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டாரா என தெரியவில்லை.

எனினும், ​இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு மற்றும் மோதல் காரணமாகவே இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!