
புத்ராஜெயா, ஜூலை-13 – தென் ரஷ்யாவில் உள்ள Elbrus மலையில் ஏறிய மலேசியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.
மலையேறும் பயணத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிக்கல்களால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான தூதரக உதவிகளையும் வழங்க அமைச்சு ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
5,642 மீட்டர் உயரம் கொண்ட Elbrus மலை, ஐரோப்பாவிலேயே மிக உயரமானதும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் மலையேறிகளிடையே புகழ்பெற்றதும் ஆகும்.



