Latestஉலகம்

சீனாவில் 12 மில்லியன் சொத்துகளை நண்பருக்கு எழுதி வைத்த இளைஞர்

சீனா, ஜூலை 13 – சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், சுமார் 12 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தனது சொத்துகள் அனைத்தையும் குடும்பத்தினருக்குப் பதிலாக நண்பருக்கு உயில் எழுதி வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞர், தனது அடுக்குமாடி வீடு மற்றும் சேமிப்புப் பணம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் நண்பருக்கு வழங்கும் வகையில் உயில் தயாரித்துள்ளார். இந்த முடிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சீன சட்டத்தின்படி, 18 வயது நிறைவடைந்தவர்கள் உயில் எழுதலாம். எனவே, அந்த இளைஞரின் உயில் சட்டப்படி தயாரிக்கப்பட்டிருந்தால் அது செல்லுபடியாகும். ஆனால், அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால், அது நீதிமன்றத்தில் சட்ட ரீதியான சவாலை எதிர்கொள்ளக்கூடும்.

இந்தச் சம்பவம், தனிநபரின் சொத்து உரிமை மற்றும் உயில் தொடர்பான சட்டங்கள் குறித்து சீனாவில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!