Latestவிளையாட்டு

ஸ்பெயின்-பிரான்ஸ் அரையிறுதி ஆட்டத்தை விட இங்கிலாந்து-அர்ஜேண்டினா டிக்கெட் விலை இரு மடங்கு அதிகம்

அட்லாண்டா, ஜூலை-14 – 2026 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டத்தின் டிக்கெட் விலை, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாட்டத்திற்கான டிக்கெட் விலை கடந்த 3 நாட்களில் 34 விழுக்காடு அதிகரித்து 2,841 டாலரை எட்டியுள்ளது.

இங்கிலாந்து-அர்ஜேண்டினா மோதும் ஆட்டத்திற்கு இரசிகர்களிடையே உள்ள அதீத எதிர்பார்ப்பு காரணமாக, அதன் டிக்கெட்டுகள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த அதிக விலை நிர்ணயம் குறித்து இரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் நிலையில், போட்டி ஏற்பாட்டளர் மற்றும் FIFA தரப்பிலிருந்து இதுவரை முறையான விளக்கங்கள் எதுவும் வெளியாகவில்லை.

கால்பந்து உலகின் ஜாம்பவான்களாகக் கருதப்படும் அணிகள் மோதிக்கொள்வதால், அரங்கில் ஆட்டத்தைக் நேரில் காண உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

​இந்த விலை உயர்வு குறித்து கால்பந்து ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

நாளை அதிகாலை பிரான்ஸ்-ஸ்பெயின் ஆட்டமும் மறுநாள் அதிகாலை இங்கிலாந்து-அர்ஜேண்டினா ஆட்டமும் நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!