Latestமலேசியா

குளுவாங்கில் பள்ளி பேருந்து மோதி முதலாம் ஆண்டு மாணவன் பலி

குளுவாங், ஜூலை-16-​ஜோகூர், குளுவாங்கில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி பேருந்து மோதியதில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

​தாமான் ஸ்ரீ லாலாங் பகுதியில் உள்ள ஜாலான் பூங்கா ராயா அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

பேருந்திலிருந்து இறங்கிய சிறுவன் சாலையின் இடதுபுறம் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் திரும்பிய பேருந்து அவன் மீது மோதியது.

​தலையில் படுகாயமடைந்த அந்தச் சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குளுவாங் மாவட்ட போலீஸ் கூறியது

​36 வயது பெண் பேருந்து ஓட்டுநர், விபத்தை உணர்ந்தவுடன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், கவனக்குறைவாக வாகனமோட்டி மரணத்தை விளைவித்ததாக இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!