Latestமலேசியா

3,000க்கும் மேற்பட்ட மாணவர்களை ஈர்த்த MSU வேலைவாய்ப்பு கண்காட்சி; ‘வணக்கம் மலேசியா’ உட்பட 9 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஷா ஆலாம், ஆகஸ்ட்-1-MSU வாழ்நாள் கற்றல் மற்றும் தொழில் வழிகாட்டி கண்காட்சி, ஜூலை 31 முதல் இன்று ஆகஸ்ட் வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை MSU பல்கலைக்கழக Chancellor மண்டபத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

​இக்கண்காட்சியை MSU பல்கலைக்கழகத்தின் தலைவரும் நிறுவனருமான தான் ஸ்ரீ Dr முஹமட் ஷுக்ரி அப் யாசிட் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

​இம்முறை நடைபெற்ற கண்காட்சியில் 130-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் இடம்பெற்றன.

​60 நேரடி கூடாரங்கள், ​70 இணையவழி கூடாரங்களும் அவற்றிலடங்கும்.

​வணக்கம் மலேசியாவின் சிறப்புக் கூடாரமும் அதில் குறிப்பிடத்தக்கது.

​இந்த 2-நாள் நிகழ்வில், 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, 9 நிறுவனங்கள் MSU பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன.

அதே வேளை, வணக்கம் மலேசியா நிறுவனமும் எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் MSU பல்கலைக்கழகத்துடன் அதிகாரப்பூர்வமாக MoU ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

​இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வணக்கம் மலேசியாவின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான தியாகராஜன் முத்துசாமி மாணவர்களுக்குச் சிறப்பு உரையாற்றினார்.

ஊடகக் துறையில் நீடிக்க, ஒரு குறிப்பிட்ட திறமை மட்டும் போதாது; AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கற்றுத் தேர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வணக்கம் மலேசியாவிடம் பேசிய தான் ஸ்ரீ சுக்ரி, எதிர்கால திறமைகளை ஊக்குவித்து தயார் படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

கூடாரங்களை அமைத்து வேலைவாய்ப்புக் கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்களும் மாணவர்களின் பங்கேற்பு மற்றும் ஆர்வம் குறித்து கருத்துரைத்தன.

தாங்கள் அடைந்த நன்மைகள் குறித்து மாணவர்கள் சிலரும் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

இக்கண்காட்சியின் மூலம் மாணவர்கள் புதிய அறிவைப் பெற்றதோடு, தொழில்முறை நிபுணர்களுடன் தொடர்புகொள்ளவும், வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் முடிந்தது.

மேலும், பல மாணவர்கள் நேரடியாகவே தொழிற்பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றதால், இந்நிகழ்வு அனைவருக்கும் மிகவும் பயனுள்ள அனுபவமாக அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!