
மஞ்சோங், அக்டோபர்-31 – பேராக், சித்தியவான், Kampung Koh, Taman Hijau-வில் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த BMW சொகுசு கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் சத்தம் கேட்டபோதிலும், காரின் உரிமையாளர் காலை 9 மணியளவிலேயே தனது காரின் கதவில் 4 துப்பாக்கிச் சூட்டு அடையாளங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
அதன் பின்னரே போலீஸில் புகாரளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் CCTV கேமரா பதிவுகளை ஆய்வுச் செய்ததில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.
1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ள மஞ்சோங் போலீஸார், இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொது மக்கள் உடனடியாக மாவட்டப் போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.



