Latestமலேசியா

அரசு ஊழியர்களை அரசியல் அழுத்தத்திலிருந்து பாதுகாப்பேன் – சாஹிட்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi), அரசு ஊழியர்கள் அரசியல் மோதல்களில் இழுக்கப்படக் கூடாது என்றும், அவர்கள் விதிமுறைகளுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் இணங்க தங்கள் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் அமைச்சு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக சில அரசு ஊழியர்கள் அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார். இருப்பினும், யார் அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

அரசு ஊழியர்களை தொடர்ந்து தாம் பாதுகாப்பதாகவும் அரசு நிர்வாகம் அரசியல் காரணங்களால் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகும், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை ஒற்றுமை கூட்டாட்சி அரசு வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என்று சாஹிட் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!