
புது டெல்லி, ஆகஸ்ட்-12-அண்மையில், நடுவானில் சட்டென கீழே இறங்கி கடுமையாகக் குலுங்கிய ஏர் இந்தியா விமானத்தின் முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்து ஃபுக்கெட்டிலிருந்து புது டெல்லி நோக்கிச் சென்ற அந்த விமானம், திடீரென 300 அடி கீழே இறங்கியதில் 17 பயணிகள் காயமடைந்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதியானது.
இதையடுத்து இரு விமானிகளும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப உதவி வழங்கிட AirBus நிறுவனத்தின் நிபுணர் குழு புது டெல்லிக்கு விரைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரியிடம் பொது விமானப் போக்குவரத்து அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.



