
ஸ்பெயின், ஆகஸ்ட் 13 – ஸ்பெயினில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்துள்ளது. நிலவின் நிழல் சூரியனை முழுமையாக மறைத்ததால், சில நிமிடங்களுக்கு பகல் நேரமே இருளில் மூழ்கியது.
ஐஸ்லாந்து (Iceland) உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து சென்ற கிரகணத்தை ஸ்பெயினின் வடக்குப் பகுதிகள் முதல் பலேரிக் தீவுகள் (Balearic Islands) வரை ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் கண்ணாடிகளுடன் கண்டு ரசித்தனர்.
இந்த அரிய நிகழ்வை முன்னிட்டு சுமார் 4.5 லட்சம் கூடுதல் சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருவார்கள் என்றும், பொருளாதாரத்திற்கு சுமார் 347 மில்லியன் யூரோ வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த முழு சூரிய கிரகணம் தெற்கு ஸ்பெயின் மற்றும் வட ஆப்பிரிக்காவில் 2027 ஆகஸ்டில் காணப்படும்.



