
பெய்ஜிங், ஆகஸ்ட்-16-மருத்துவம், AI தொழில்நுட்பம் மற்றும் கணித உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு வியத்தகு சாதனை நிகழ்ந்துள்ளது.
ஆம், பெய்ஜிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான Dr Jin Shanmu, ChatGPT உதவியுடன் 20 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு சிக்கலான கணிதப் புதிருக்குத் தீர்வு கண்டுள்ளார்.
மூளைக்கான _ultrasound_ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு இந்த மெட்ரிக்ஸ் கணிதப் புதிர் தெரியவந்தது.
முறையான உயர் கணிதப் பயிற்சி இல்லாத போதிலும், அவர் OpenAI நிறுவனத்தின் மேம்பட்ட ‘GPT-5.6-Sol’ மாதிரியைப் பயன்படுத்தினார்.
சுமார் 16 மணி நேர தொடர் முயற்சிக்குப் பிறகு, 2004-ஆம் ஆண்டு முதல் கணித வல்லுநர்களுக்குச் சவாலாக இருந்த “குரூஸேக்ஸ் கணிப்பு” (Crouzeix’s conjecture) என்ற விதியை AI-யின் உதவியுடன் அவர் வெற்றிகரமாக நிரூபித்துள்ளார்.
கார்னெல் (Cornell) பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் இக்கணிப்பை முதலில் முன்வைத்த பிரெஞ்சு கணிதவியலாளர் மைக்கேல் குரூஸேக்ஸ் (Michel Crouzeix) ஆகியோரும் இந்தத் தீர்வை ஆய்வுச் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அறிவியலின் அடுத்தகட்ட மைல்கற்களை எட்ட உதவும் என்பதற்கு இந்தச் சாதனை ஒரு சிறந்த சான்றாகப் பார்க்கப்படுகிறது.



