
ஷா ஆலாம், ஆகஸ்ட் 19 – ஷா ஆலாமிலுள்ள பள்ளியில், படிவம் 3 மாணவர் ஒருவரை தாக்கிய 17 வயது மூத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நடந்த இந்தத் தாக்குதலில் 15 வயது மாணவரின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டதுடன், அவரது கேட்கும் திறன் பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் காவல்துறை தலைவர் ஷாசெலி கஹார் (Shazeli Kahar) கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கேலி, கிண்டல் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம். கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாணவருக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் குறித்து மருத்துவ அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைத்த பின்னரே உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



