Latestமலேசியா

நள்ளிரவில் மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த 4 மாணவர்கள் கைது

குவாலா நெரூஸ், ஆகஸ்ட் 26 – திரெங்கானுவிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றின் மாணவிகள் விடுதிக்குள் அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அத்துமீறி நுழைந்த நான்கு ஆண் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவரும் அதே பள்ளியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் அனுமதியின்றி விடுதிக்குள் நுழைந்ததாகவும், பின்னர் பள்ளி நிர்வாகத்தினரால் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குவாலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அஸ்லி முகமட் நோர் (Asisten Komisioner Azli Mohd Noor), ஆகஸ்ட் 22ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். விசாரணைக்கு உதவிய பின்னர் அவர்கள் அனைவரும் காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாணவர்களின் குடும்பத்தினர், மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD), திரெங்கானு மாநிலக் கல்வித் துறை (JPNT), கல்வி அமைச்சு (KPM), பள்ளி முதல்வர், மாணவர் விவகார உதவி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர்கள் பங்கேற்ற சந்திப்பும் நடைபெற்றது. மாணவர்களுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கையை கல்வி அமைச்சு தீர்மானிக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!