Latestமலேசியா

சபாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரி பலி

சபா, ஆகஸ்ட் 27- சபா, தாவாவில் (Tawau), நேற்று மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 55 வயதுடைய மலேசிய குடிமை விமானப் போக்குவரத்து ஆணையமான CAAM விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற அவர், சாலை மேற்பரப்பு சீரற்றிருந்ததால் நிலைதடுமாறி காரின் முன்பகுதியில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். காரை ஓட்டிய 28 வயது நபரால் உடனடியாக பிரேக் போட முடியாததால், மோட்டார் சைக்கிளும் அதன் ஓட்டுநரும் காரின் கீழ் சிக்கினர்.

தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் காயமின்றி தப்பிய நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக தாவாவ் (Tawau) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!