Latestமலேசியா

மலாக்கா தேர்தல்: 21 தொகுதிகளிலும் BN போட்டியிடும் – ரவுஃப்

மலாக்கா, ஆகஸ்ட் 27 -மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்ற 21 தொகுதிகளிலும் தேசிய முன்னணி (BN) போட்டியிடும் என்று மலாக்கா BN தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோஃப் (Ab Rauf Yusoh) தெரிவித்துள்ளார்.

இந்த 21 தொகுதிகள் தொடர்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்றும், BN-உடன் ஒத்துழைக்க விரும்பும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு இது அடிப்படை நிபந்தனை என்றும் அவர் கூறினார்.

PAS உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் வரவேற்பதாகக் கூறிய ரவுஃப், கூட்டணி தொடர்பான எந்த முடிவும் BN உச்ச மன்றத்தின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்படும் என்றார்.

மலாக்கா சட்டமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்றும், அடுத்த மாதம் கலைக்கப்படும் என்ற தகவல் குறித்து தற்போது உறுதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில், 2021 தேர்தலில் BN 21, PH 5, PN 2 தொகுதிகளில் வென்றன. எனினும், Rembia தொகுதி உறுப்பினர் ஜைலானி காமிஸ் (Jailani Khamis) PAS-க்கு தாவியதால், தற்போது BN வசம் 20 தொகுதிகள் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!