Latestமலேசியா

புத்ராஜெயாவில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 31 – புத்ராஜெயாவில் இன்று மலேசியாவின் 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், டாத்தரான் புத்ராஜெயா முழுவதும் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தேசப்பற்று மற்றும் மகிழ்ச்சியால் களைகட்டியது.

தேசிய தின அணிவகுப்பைக் காண பொதுமக்கள் முதல் நாளிலேயே புத்ராஜெயாவுக்கு வரத் தொடங்கிய நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் மக்கள் வருகை புரிந்து அணிவகுப்பைக் காண காத்திருந்தனர். பங்கேற்ற பொதுமக்கள் சிலர், தங்களது அனுபவத்தையும் Vanakkam Malaysia-விடம் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா சாரித் சோஃபியா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள் அணிவகுப்பை பார்வையிட பொதுமக்கள் பெருமளவில் கண்டு ரசித்தனர்.

அணிவகுப்பு மற்றும் பேரணியில் 10,819 பேர் பங்கேற்றதுடன், பல்வேறு அரசுத் துறைகள், பாதுகாப்புப் படைகள், சீருடைப் படையினர், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த 76 குழுக்கள் அணிவகுத்துச் சென்றன.

இதில் K9 பிரிவின் மோப்ப நாய்கள் அணிவகுத்து சென்றது பார்ப்பவர்களுக்கு கண்கவர் நிகழ்வாக அமைந்தது.

மேலும் கடந்த 35 ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆதரவளித்து வரும் Munchy’s மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் “Taste Munchy’s, Taste Happiness” என்ற கருப்பொருளின் கீழ், பொது மக்கள் இணைந்து மகிழும் வகையில் அங்குச் சிறப்புக் கூடாரங்களும் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில், Munchy’sசின் குழுக்களும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன.

Munchy’s சிறப்புக் கூடாரத்திற்கு வருகை தந்த தொடர்பு அமைச்சின் கட்டுப்பாடு மற்றும் இணக்கப் பிரிவு துணைச் செயலாளர் Kamarudin Abdul Rani, தேசிய தின அணிவகுப்பில் Munchy’s-இன் பங்கேற்பு குறித்து பாராட்டுத் தெரிவித்ததுடன், இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் சிறப்புகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

Interview

பொதுமக்களில் சிலரும், Munchy’s தயாரிப்புகள் தங்களுக்குப் பிடித்தமானவை எனக் கூறியதுடன், தேசிய தினக் கொண்டாட்டத்தில் அந்நிறுவனம் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக Vanakkam Malaysia-விடம் தெரிவித்தனர்

அலங்கார வாகனங்கள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் வான்படை விமானங்களின் சாகசக் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

மேலும், மலாய் மற்றும் பாரம்பரிய இசைகளுடன் தமிழர்களிடையே பிரபலமான “Goyang Goyang” என்ற தமிழ் பாடலும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், இசை மற்றும் நடனங்களுடன் நடைபெற்ற இந்த தேசிய தினக் கொண்டாட்டம், மலேசியாவின் பல்லின மக்களின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் அழகாக வெளிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!