Latestமலேசியா

பினாங்கு விமான நிலையக் கழிப்பறைத் தொட்டியில் வீசப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு

பினாங்கு, செப்டம்பர் 2 – பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் கழிப்பறையிலுள்ள சுகாதாரத் தொட்டிக்குள், தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து சிறிது நேரமே ஆகிருக்கலாம் எனவும், அதனுடன் நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள் கொடி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான மேல் விவரங்களை உறுதிப்படுத்த போலீசாரிடம் தகவல் கோரப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!