
கோலாலம்பூர், செப்டம்பர் 2 – அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியா வேலைக்கு அழைத்துவரும் என வெளியான தகவலை மலேசிய அரசு மறுத்துள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil), இந்த தகவலை வங்கதேசத்தின் இளநிலை அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாகவும், அது வங்கதேச அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்றும் கூறினார்.
இதனிடையே, மியான்மார் அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்தும் ஃபஹ்மி விளக்கம் அளித்தார். முதல் கட்டமாக 1,476 அகதிகள் தங்களது விருப்பத்தின் பேரில் மியான்மர் திரும்புவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மியான்மாரில் நிலவும் மோதல்கள் காரணமாக அகதிகளைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப முடியாது என ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்திருந்தது.



