
கோலாலம்பூர், செப்டம்பர் 6 – PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, மலேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதாகக் கூறியிருந்தார். இந்தக் கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக 3 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, புக்கிட் அமான் போலீஸ், ஹாடியின் தரப்பை தொடர்புகொண்ட பொழுது போலீஸ் விசாரணைக்கு ஹாடி முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவரது அரசியல் செயலாளர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா வந்தபோது, சில PAS தலைவர்கள் அமெரிக்க தூதரகத்தை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், அப்போது அரசாங்கத்தை கவிழ்க்க உதவி வழங்க முன்வந்ததாகவும் ஹாடி கூறியிருந்தார்.
ஆனால், அமெரிக்க தூதரகம் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மலேசியாவின் அரசியல் தலைமையை மாற்றவோ தீர்மானிக்கவோ அமெரிக்கா ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளது.



