Latestமலேசியா

பராமரிப்பு மையத்தில் குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம்: குற்றச்சாட்டை மறுத்த பெண் பணியாளர்கள்

குவாந்தான், செப்-11-பஹாங், Taman Cenderawasih Indahவில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையமொன்றில் குழந்தைகளைச் சித்ரவதை செய்ததாகத் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இரு பெண் பணியாளர்கள் மறுத்து விசாரணை கோரினர்.

மே 15 மற்றும் ஆகஸ்ட் 11 ஆகிய தேதிகளில் இரண்டு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளைச் சித்ரவதை செய்ததாக 39 வயது Norlida Abdul Razak மற்றும் 31 வயதான Zairifah Zaknal Abidin மீது 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், தலா 50,000 ரிங்கிட் வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அரசுத் தரப்பு தலா 15,000 ரிங்கிட் பிணை கோரிய நிலையில், அத்தொகையைக் குறைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை அடுத்து நீதிபதி 8,000 ரிங்கிட் பிணைத் தொகையில் ஒரு ஜாமீந்தாரர் உத்தரவாதத்துடன் இருவரையும் விடுவிக்க அனுமதி அளித்தார். அதோடு கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அவ்வழக்கு அக்டோபர் 26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சம்பந்தப்பட்ட குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவது தொடர்பான காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானது. அதற்கு பல இணையவாசிகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!