Latestமலேசியா

பட்டர்வெர்த் கால்வாயில் ஆடவர் சடலம் மீட்பு

பட்டர்வெர்த், செப்டம்பர் 11 – பட்டர்வெர்த் தாமான் கெலிசா ஈமாஸ், ஜாலான் சியாக்காப் பகுதியிலுள்ள துன் ஹுசேன் ஓன் இடைநிலை பள்ளிக்கு அருகிலுள்ள 1.5 மீட்டர் ஆழமான கால்வாயில் ஆடவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இன்று நண்பகல் காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பெராய் (Perai) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலம் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜோன் சாகுன் பிரான்சிஸ் (John Sagun Francis) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!