
தமிழ்நாடு, செப்டம்பர் 11 – தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், துபாய் வழியாக லண்டன் நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்தப் பயணம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்லும் விஜயின் விமானத்தை ஏராளமானோர் Flightradar24 தளத்தில் கண்காணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, விஜய் பயணித்த விமானம் அந்த நேரத்தில் Flightradar24 தளத்தில் உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக முதலிடத்தில் இருந்ததாக சமூக வலைத்தளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
விஜயின் லண்டன் பயணம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அவரது விமானப் பயணத்தைக் கண்காணிப்பது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.



