
ஈப்போ, செப்டம்பர்-15,ஈப்போ, சிம்பாங் பூலாய் அருகே உள்ள கெராமட் பூலாய் குவாரியில், லாரி மீது பெரிய பாறை உருண்டு விழுந்த விபத்தில் 53 வயது லாரி ஓட்டுநர் M. சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.பாறை விழுந்த அதிர்வில் லாரியின் முன் பகுதி முற்றிலும் நசுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், தீவிர போராட்டத்திற்குப் பிறகு ஓட்டுநரின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ், தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறது.



