Latestஉலகம்

நேப்பாளத்தில் கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தை தாக்கியதில் வனப் பாதுகாவலர் காயம்

பெசிசகார், செப்-15–நேப்பாளத்தின் Lamjung மாவட்டத்தில், மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிறுத்தை ஒன்று கூண்டிலிருந்து தப்பி வனப் பாதுகாவலர் ஒருவரைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி Dhung Khola பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அச்சிறுத்தை, Lamjung வனத்துறை அலுவலகத்திற்கு அண்மையில் கொண்டு வரப்பட்டிருந்தது.

அதைப் போக்குவரத்துக் கூண்டிலிருந்து பெரிய கூண்டிற்கு மாற்ற அதிகாரிகள் முயன்ற போது, மயக்க நிலையில் இருந்த சிறுத்தை திடீரென கூண்டின் கதவை உடைத்துத் தப்பியது. பின்னர் அங்கிருந்தவர்களை நோக்கிப் பாய்ந்த அச்சிறுத்தை, 57 வயதான வனக் காவலர் ஒருவரைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

அச்சிறுத்தை வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த நிலையில், அதனைக் காண வனத்துறை அலுவலகத்திற்கு வெளியே பொதுமக்கள் திரண்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்தவும், மக்கள் சிறுத்தையின் அருகே செல்லாமல் இருக்கவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

சிறுத்தையை மீண்டும் பாதுகாப்பாகப் பிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், அச்சிறுத்தையின் தற்போதைய நிலை குறித்து இதுவரை தகவல் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை. அச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!