Latestஉலகம்

நேப்பாள வெள்ளப் பேரழிவு: 4 வாரங்களுக்குப் பிறகு பலி எண்ணிக்கை 1,450-ஐத் தாண்டியது; மேலும் 6,000 பேர் மாயம்!

காட்மண்டு, செப்டம்பர்-21,தெற்காசிய நாடான நேப்பாளத்தில் கோரத் தாண்டவமாடிய திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 4 வாரங்கள் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450-தை கடந்துள்ளது.

சுமார் 6,000 பேர் இன்னும் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்களைத் தேட, மீட்புப் படையினர் நேரத்துடன் போராடி வருகின்றனர்.

​ஆற்றுப் படுகைகள், சேறு நிறைந்த சுரங்கப் பாதைகள் மற்றும் இடிபாடுகளிலிருந்து கூடுதல் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 1,451-ராக உயர்ந்துள்ளதாக நேப்பாளப் போலீஸ் உறுதிப்படுத்தியது.அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 367 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

​ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பொங்கி எழுந்த போத்தேகோஷி நதி, வீடுகள், சாலைகள், தொங்கு பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையக் கட்டமைப்புகளை சில நிமிடங்களிலேயே அடித்துச் சென்றது.

​உடல்கள் பெருமளவில் சிதைந்துள்ளதால், மரபணு மாதிரிகளைச் சேகரித்த பின் சுமார் 1,300 உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன; இதுவரை 110 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!