Latestமலேசியா

ஜோகூர் பாரு EDL நெடுஞ்சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்த மூவர் கைது

ஜோகூர் பாரு, செப்டம்பர் 21 – ஜோகூர் பாருவிலுள்ள EDL நெடுஞ்சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்த மூன்று ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான 16 விநாடி காணொளி சமூக வலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது.

28 முதல் 36 வயதிற்குட்பட்ட மூவரும் நேற்று இரவு 9.30 மணியளவில் தாமான் மாஜு ஜெயாவிலுள்ள உணவகத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் MPV வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு முந்தைய குற்றப் பதிவு இருப்பது குறிப்பிடத்தக்கது .

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!