Latestமலேசியா

SISWA PERAI 2026 திட்டத்தின் கீழ் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்

பிறை, செப்-22-SISWA Perai 2026 திட்டத்தின் கீழ் 40 மாணவர்களுக்கு இலவசமாக புதிய மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மடிக்கணினியும் சுமார் 2, 000 ரிங்கிட் மதிப்புடையதாகும். மொத்த உதவியின் மதிப்பு 80,000 ரிங்கிட் என பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 120-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக கிட்டத்தட்ட 300,000 ரிங்கிட் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்துக்கு அரசாங்க நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அரசியலில் நுழைவதற்கு முன் தமது நிறுவனப் பணிக் காலத்தில் சேமித்த தனிப்பட்ட பணத்தின் மூலம் அந்த உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமது சொந்த வாழ்க்கைப் பயணத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சுந்தராஜூ, கல்விக்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது அது மாணவர்களின் எதிர்காலத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவி மாணவர்களுக்கு அறிவு, வாய்ப்பு மற்றும் கல்வியைத் தொடர தேவையான ஆதரவை வழங்கும் என்றாரவர்.

மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகளை முழுமையாகப் பயன்படுத்தி தங்களது கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் வெற்றி பெற்ற பின் மற்றவர்களுக்கும் உதவி செய்து அடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக SISWA Perai திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் குடும்ப அல்லது நிதிப் பின்னணி அவர்களின் கல்வி வாய்ப்புக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே திட்டத்தின் நோக்கம். கல்வியில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு சமம் என்பதால், எந்த மாணவரும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்ய அத்திட்டம் தொடரப்படும் என்றும் சுந்தராஜூ குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!