Latestமலேசியா

ஆசிய விளையாட்டு: ஷாமலராணி மலேசியாவுக்கு மூன்றாவது தங்கம்

கோலாலம்பூர்,செப்டம்பர் 23 – மலேசிய கராத்தே வீராங்கனை சி. ஷாமலராணி, ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 55 கிலோவிற்குக் கீழ் குமிட்டே (Kumite) அதாவது நேருக்கு நேர் மோதும் சண்டைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

டொயோஹாஷி (Toyohashi) ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீராங்கனையுடன் 0-0 என சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் ஷாமலராணி வெற்றி பெற்றார்.

அரை இறுதியில் உஸ்பெகிஸ்தான் போட்டியாளரை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதே வீராங்கனையிடம் தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றி ஷாமலராணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

முன்னதாக முதல் சுற்றில் மக்காவைச் சேர்ந்த Fong Man Waiயை 8-0 என்றும், காலிறுதியில் வங்கதேசத்தின் வீராங்கனையை 5-4 என்றும் வீழ்த்தினார். இதன்மூலம் ஷாமலராணி மலேசியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!