Latestஉலகம்

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆடவர் மீது புகார்

அமெரிக்கா, செப்டம்பர் 24 – அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில், தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஆடவன் தன்னைப் பார்த்தபடி பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 3ஆம் தேதி நியூயார்க் நகருக்குச் சென்ற காலை நேர விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. விமானப் பணியாளர்களிடம் புகார் தெரிவித்தும், வேறு இருக்கை வழங்கப்படாததால் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மீண்டும் அந்த ஆடவனின் அருகிலேயே அமருமாறு தன்னை கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விமான நிறுவனப் பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், விமான நிலையத்தில் உதவி கேட்டபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து அவர் அமெரிக்க யுனைடெட் ஏர்லைன்ஸிடம் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், பயணியுடன் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!