Latestமலேசியா

அனாக் புக்கிட் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட அவசரநிலை: KTMB நிலையத்திற்குள் செல்ல வேலி ஏறிய பயணிகள்

அலோர் ஸ்டார், செப்டம்பர் 25 – கெடா அலோர் ஸ்டாரிலுள்ள அனாக் புக்கிட் (Anak Bukit) KTMB ரயில் நிலையத்தின் நுழைவாயில் காலை 6.30 மணி வரை திறக்கப்படாததால், சில பயணிகள் நிலையத்திற்குள் செல்ல வேலியை ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அன்று பணியிலிருந்த ஊழியர் உடல்நலக் காரணமாக பணிக்கு வர முடியாததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக KTMB தெரிவித்துள்ளது. அருகிலுள்ள நிலையத்தில் பணிபுரிய இருந்த ஊழியர் ஒருவர் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டு, காலை 6.30 மணிக்கு நிலைய நுழைவாயில் திறக்கப்பட்டது.

இதனால் சுமார் 25 பயணிகள் பாதிக்கப்பட்டதுடன், காலை 5.58 மற்றும் 6.18 மணிக்கு புறப்பட வேண்டிய KTM Komuter 2901 மற்றும் 2903 ஆகிய இரண்டு ரயில்களை அவர்கள் தவறவிட்டனர். சம்பவத்திற்கு KTMB மன்னிப்பு கேட்டதுடன், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!