Latestமலேசியா

13 முதல் 14 வயதுடைய 3 மாணவர்களிடம் பாலியல் அத்துமீறல்; முன்னாள் தாஹ்ஃபிஸ் பள்ளி முதல்வர் கைது

டுங்குன், செப்டம்பர்-27,திரங்கானு, டுங்குனில் உள்ள தாஹ்ஃபிஸ் சமயப் பள்ளி ஒன்றின் 3 மாணவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பில், அப்பள்ளியின் முன்னாள் முதல்வரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் இடையிலான காலக் கட்டத்தில், 13 முதல் 14 வயதிலான அம்மூன்று மாணவர்களும் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

நேற்று இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து 3 தனித்தனி போலீஸ் புகார்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, 26 வயது சந்தேக நபர் இரவோடு இரவாகக் கைதுச் செய்யப்பட்டதாக டுங்குன் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் Nik Ab Halim Nik Mat உறுதிப்படுத்தினார்.

அவ்விளைஞர் தற்போது அதே மாவட்டத்தில் வேறொரு சமயப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக வேலைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, சந்தேக நபர் 5 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!