Latestமலேசியா

சபா கினாபாத்தாங்கான் ஆற்றில் யானையின் சடலம் கண்டெடுப்பு

சபா, அக்டோபர் 1 – சபா கினாபாத்தாங்கான் (Kinabatangan) ஆற்றில் யானை ஒன்றின் சடலம் நேற்று மிதந்து சென்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மாலை 4.30 மணியளவில் உள்ளூர் மக்கள் யானையின் சடலத்தைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட யானையாக இது இருக்கலாமென்று சபா வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், யானையின் நிலை குறித்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த பின்னரே உறுதியாகத் தெரிவிக்க முடியும்.

சம்பவ இடத்திற்குச் செல்வதில் அதிகாரிகளுக்கு படகு பற்றாக்குறை பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!