Latestமலேசியா

ஷா ஆலாம், கிள்ளானில் திடீர் வெள்ளம்; பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின

ஷா ஆலாம், நவம்பர்-18,சிலாங்கூரின் ஷா ஆலாம், கிள்ளான் மற்றும் புஞ்சாக் ஆலாம் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய கனமழையால், பல முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, ஐ-சிட்டி, பண்டார் புக்கிட் ராஜா, கோத்தா கெமுனிங், மேரு மற்றும் கிள்ளான் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது, சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களில் தெரிந்தது.

சில இடங்களில் வெள்ளநீரைக் கடக்க முயன்ற வாகனங்கள், இயந்திரக் கோளாறு காரணமாகச் சாலைகளிலேயே நின்றுவிட்டன.

இதனால், பொது மக்கள் சில வாகனங்களைத் தள்ளி வெளியேற்றும் நிலையும் ஏற்பட்டது.

இதனிடையே, NKVE நெடுஞ்சாலையில் புக்கிட் ராஜாவிலிருந்து ஷா ஆலாம் செக்‌ஷன் ஏழுக்குச் செல்லும் சந்திப்புப் பாதை, வெள்ளம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டதாக PLUS நிறுவனம் தெரிவித்தது.

தொடர்ச்சியான கனமழையால் வெள்ள அபாயம் உள்ள சாலைகளைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு வாகனமோட்டிகள் அதான்போது அறிவுறுத்தப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!