
கோலாலம்பூர், நவ 18- நாட்டின் முதலீட்டு வரைபடத்தில் ஜோகூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், மாநிலம் RM99.7 பில்லியன் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை ஈர்த்துள்ளதாக மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையமான MIDA தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான RM91.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில், ஜோகூரின் முதலீடு உயர்ந்துள்ளது. சேவைத்துறையில் RM68.3 பில்லியனும், உற்பத்தித் துறையில் RM31.2 பில்லியனும் பதிவாகின. ஜோகூரின் மொத்த முதலீட்டில் RM81.4 பில்லியன் வெளிநாட்டு முதலீடாகும்.
மாநில வாரியான பட்டியலில் சிலாங்கூர் RM87.9 பில்லியனுடன் இரண்டாமிடத்திலும், பினாங்கு RM41.1 பில்லியனுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
நாடு முழுவதும் ஒன்பது மாதங்களில் RM350.4 பில்லியன் முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன; இது கடந்த ஆண்டைவிட 20.7% அதிகம். அங்கீகரிக்கப்பட்ட 4,387 திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், 152,090 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



