Latestமலேசியா

கோலாலம்பூரில் 24 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை சுட்டு வீழ்த்திய காவல்துறை

கோலாலம்பூர், நவ.18-பெண்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்து குறைந்தது 24 தெருக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர், Chow Kit பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிகாலை 2 மணியளவில் சந்தேக நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்து காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, ஆயுதம் ஏந்தியிருந்த அவர் அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அந்நபர் உயிரிழந்ததை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

ஹோட்டல் அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு துப்பாக்கியும் methamphetamine எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப் பின்னணி கொண்ட அச்சந்தேக நபர், டாக்ஸி ஓட்டுநர் போன்று வேடமிட்டு பயணிகளிடம் கொள்ளையடித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்து அவர் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அந்நடவடிக்கையின் மூலம், கோலாலம்பூரில் பதிவான 24 கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக Fadil தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!