Latestமலேசியா

மஇகா பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எஸ். ஆனந்தன் விலகல்: விக்னேஸ்வரன் உறுதி

கோலாலம்பூர் நவ18 – மஇகா பொதுச் செயலாளர் பதவியிலிருந்து டத்தோ எஸ். ஆனந்தன் விலகியதை கட்சித் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

வணக்கம் மலேசியாவிடம் பேசிய அவர், தனிப்பட்ட பொறுப்புகள் மற்றும் காரணங்களால் ஆனந்தன் பதவி விலகலைச் சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.

கட்சியைப் பொறுத்தமட்டில் பதவி விலகல் என்பது வழக்கமான நடைமுறை என்றும், புதிய பொதுச் செயலாளர் உரிய நேரத்தில் நியமிக்கப்படுவார் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

முன்னதாக ஆனந்தன் பதவி விலகியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அதனை உறுதிப்படுத்த தொடர்பு கொண்ட போது விக்னேஸ்வரன் இவ்விபரங்களைத் தெரிவித்தார்.

இதற்கிடையில் மஇகா மத்திய செயற்குழுக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமையும், பொதுப் பேரவை வரும் நவம்பர் 28-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!