Latestமலேசியா

சுபாங் ஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே விளையாடிய சிறுவர்கள் – பெற்றோரின் அலட்சியமா என போலீசார் விசாரணை

கோலாலம்பூர், நவம்பர் 19 – சுபாங் ஜெயாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே விளையாடிய வெளிநாட்டைச் சேர்ந்த ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரு சிறுவர்கள் தொடர்பில், பெற்றோரின் கவனக்குறைவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி மாலை நடந்த இச்சம்பவத்தில், சிறுவர்கள் இருவரும் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியேறி, கட்டிடத்தின் வெளிப்புறத்தில் விளையாடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவான போதிலும், இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை குடியிருப்பு நிர்வாகத்தின் பிரதிநிதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

குழந்தைகள் சட்டத்தின் கீழ், குழந்தைகளைப் புறக்கணித்தல் அல்லது அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சுபாங் ஜெயா மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் சூப்பிரண்தெண்ட் முகமட் ஃபைருஸ் ஜஃபார் (Superintendan Mohd Fairus Jaafar ) தெரிவித்தார்.

விசாரணை முடியும் வரை இச்சம்பவம் குறித்து ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!