Latestமலேசியா

மலேசியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் பதிவை நிறுத்தியது UNHCR

கோலாலம்பூர்-ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) மலேசியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரைப் பதிவு செய்தல், அவர்களுக்கான ஆவணங்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நேற்று முதல் நிறுத்தியுள்ளது.

இதையடுத்து, அகதிகள் பதிவு மற்றும் தரவு நிர்வாகப் பொறுப்புகளை மலேசிய அரசாங்கம், குடிநுழைவுத் துறை (Jabatan Imigresen) மூலம் படிப்படியாக ஏற்கவுள்ளது. இதற்காக அகதிகள் பதிவு ஆவணத் திட்டம் (DPP) செயல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) முன்னதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், மலேசியாவில் UNHCR தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தவில்லை எனவும், மறுகுடியேற்றம் மற்றும் அவசரப் பாதுகாப்பு தேவைப்படும் அகதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் (Ahli Parlimen Putrajaya, Datuk Dr Radzi Jidin) இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

அதேவேளை, DPP திட்டத்தின் செயல்திறன், நிதி ஒதுக்கீடு, பதிவு செய்யப்படாத அகதிகளின் நிலை மற்றும் நாட்டின் எல்லைப் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளும் கேள்விகளும் பயனர்களிடையே வலுத்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!