Latestமலேசியா

ஜோகூர் கார் விபத்தில் இருவர் தீயில் கருகி பலி

பத்து பஹாட், நவம்பர் 18 – ஜோகூர், ரெங்கிட், ஜாலான் ஜெயா திரி பகுதியில் நேற்று இரவு இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் தீயில் கருகி உயிரிழந்த இருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் 22 வயதான கமால் நூர் ஹாஃபிஸி மிஸ்காட் (Kamal Nur Hafizi Miskat) மற்றும் 17 வயதான முஹமட் எர்ஃபான் (Muhammed Erfan) ஆவர். இவர் UNHCR அகதி அட்டை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 8.20 மணியளவில், அவர்கள் பயணித்த புரோட்டான் சாகா கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறச் சாலையில் வந்த புரோட்டான் வீரா காருடன் மோதியது. பின்னர் மின்கம்பத்தில் மோதி தீப்பற்றியதில் இருவரும் உயிரிழந்தனர்.

புரோட்டான் வீரா காரில் பயணித்த 37 வயது ஆடவரும் அவரது 60 வயது தாயாரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!