
திருச்செந்தூர், நவ.18-திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து முருகப் பெருமானுக்கு உரிய ‘அரோகரா’ முழக்கத்தைப் பயன்படுத்திப் பாடியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இனி வரும் மேடைகளில் இதுபோன்று பாட மாட்டேன் என்று பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்த அவர், தாம் செய்த செயலுக்காக முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டதாகவும், இனிமேல் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்ததாகவும் கூறினார்.
மேலும், தமது பாடல் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அமைந்திருக்கவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் யாரும் தவறாக நினைக்கவோ வருத்தப்படவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் அவர்களுக்கும் தெரியாமல் பாடிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
இனி வரும் மேடைகளில் இதுபோன்று பாட மாட்டேன்; எதிர்காலத்தில் கவனத்துடன் செயல்படுவேன் என பாடகர் வேல்முருகன் குறிப்பிட்டார்.



