Latestமலேசியா

காலணிகளுடன் கோவிலுக்குள் நுழையவில்லை; அன்வார்-மக்ரோன் வெளிப்புற மண்டபத்தில் மட்டுமே நின்றனர்; ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் விளக்கம்

கோலாலம்பூர், நவம்பர்-19,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும் காலணிகளுடன் கோவிலின் உட்பகுதிக்குள் நுழையவில்லை என, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.

இவ்விரு தலைவர்களும் இராஜகோபுரத்தின் கீழுள்ள வெளிப்புற மண்டபத்தில் மட்டுமே நின்றதாக தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ R. நடராஜா தெரிவித்தார்.

கோவிலின் பிரதான வழிபாட்டு மண்டபத்திற்கோ கருவறைக்கோ அவர்கள் செல்லவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

தலைவர்கள் காலணிகள் அணிந்து வருகை தந்தது குறித்து மலேசிய இந்து சங்கமும் மலேசிய இந்து தர்ம மாமன்றமும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தேவஸ்தானத்தின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

மேலும், தலைவர்களின் வருகை முன்கூட்டியே திட்டமிடப்படாததால், ஆலய நிர்வாகத்திற்கும் உரிய தகவல் வழங்கப்படவில்லை என நடராஜா விளக்கினார்.

அச்சமயத்தில் ஆலய அறங்காவலர்கள் யாரும் அங்கிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

என்றாலும், இரு நாட்டுத் தலைவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்தது பெருமைக்குரிய நிகழ்வு எனக் குறிப்பிட்ட நடராஜா, இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமென அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்திரீட் வருகையின் போது ஸ்ரீ மகா மாரியம்மான் கோயிலுக்கும் மக்ரோன் வருகை மேற்கொண்டார்.

அவருக்குப் பொன்னாடைப் போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வரவேற்புப் பெற்ற நிலையில், பின்னர் இந்தக் காலணி விவகாரம் சர்ச்சையானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!