Latestமலேசியா

நாசி கோரெங் RM50, மைலோ ஐஸ் RM25! செப்பாங் F1 பந்தயத்தில் எகிறிய உணவு விலைகளால் ரசிகர்கள் அதிருப்தி

செப்பாங், அக்டோபர்-4 – செப்பாங் அனைத்துலகப் பந்தயத் தளத்தில் களைக் கட்டியுள்ள பஹ்ரேய்ன் F1GP பந்தயம், தற்போது உணவுகளின் விண்ணைமுட்டும் விலையேற்றத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

​பந்தயத்தைக் காண வந்த இரசிகர்கள், அங்குக் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் அதீத விலையைக் கண்டு சமூக வலைத்தளங்களில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

​ஒரு பொட்டலம் ‘நாசி கோரேங்’ 50 ரிங்கிட் வரை விற்கப்படுவதாகப் பகிரப்பட்ட இரசீதுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

​மேலும், ஒரு குவளை மைலோ ஐஸ் அல்லது பழச்சாறு 25 ரிங்கிட்டுக்கும், மாங்காய் பானம் 30 ரிங்கிட்டுக்கும் விற்பனை செய்யப்படுகிறதாம்.

‘Keropok Lekor’, ‘Nuggets’ போன்ற சிற்றுண்டிகளும் தலா 25 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகின்றன.

​சாதாரண உள்ளூர் உணவுகளுக்கு இவ்வளவு அதிகக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என பரவலாகக் கூறப்படும் வேளை, இந்த விலைகள் உள்ளூர் இரசிகர்களைக் குறிவைத்து நிர்ணயிக்கப்படவில்லை என மற்றொரு தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

F1 போன்ற ​மெகா பந்தய நிகழ்வுகளுக்கான வாடகை மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அடிப்படை உணவுகளுக்கே இந்த அளவுக்கு விலை வைப்பது ‘அநியாயம்’ எனப் பந்தயப் பிரியர்கள் குமுறி வருகின்றனர்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!