Latestமலேசியா

ஷா ஆலமில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லாரி மீது கார் மோதி இளைஞர் பலி

ஷா ஆலம், அக்டோபர் 14 – ஷா ஆலம், புஞ்ஜாக் ஆலாம் (Puncak Alam), ஆலம்அவானா தொழிற்பேட்டையில் இன்று காலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லாரியின் பின்புறத்தில் கார் மோதியதில், 20 வயதைக் கடந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

காலை 8.14 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், பெரோடுவா மைவி (Perodua Myvi) காரை ஓட்டிச் சென்றவர், ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். தலையில் பலத்த காயமடைந்து அவர் சுயநினைவின்றி இருந்தார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காருக்குள் சிக்கியிருந்தவரை மீட்டனர். பின்னர், சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். அவரது உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!