Latestமலேசியா

நீலாய் அரசு குடியிருப்பில் பெண் அரசு ஊழியர் கொலை; கணவர் போலீசில் சரண்

நீலாய், அக்டோபர்-16,நெகிரி செம்பிலான், நீலாயில்KLIA ஊழியர் குடியிருப்புப் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

சுங்கத்துறை அதிகாரியான 35 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர், அவரது சொந்த கணவரால் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

​நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இது குறித்த தகவல் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது உறுதிப்படுத்தினார்.

​சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான கணவர் நேராக போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

பின்னர் போலீஸார் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று மேல் விசாரணைகளை மேற்கொண்டனர்.

​உயிரிழந்த பெண்ணின் உடல் சவப் பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

கொலை வழக்காகப் பதிவுச் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!